ஒரே புகைப்படம்… கலகல மீம்ஸ்.. இணையத்தில் வைரலான பெர்னி சாண்டர்ஸ்.! | What Bernie Sanders Explained About Viral Memes On Him | Puthiyathalaimurai – Tamil Information | Most current Tamil Information | Tamil News Online

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் எடுக்கப்பட்ட ஒற்றை புகைப்படத்தால் மிகவும் பிரபலமாகியுள்ளார் பெர்னி சாண்டர்ஸ்.

அமெரிக்காவின் 46-வது அதிபராக கடந்த 20ஆம் தேதி பதவியேற்றார், ஜோ பைடன். வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்த இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஒருவர் ஒற்றை லுக்கால் இணையத்தில் ஆக்கிரமித்து இருக்கிறார்.  அவர்தான் அமெரிக்காவின் நாடாளுமன்ற பிரதிநிதி பெர்னி சாண்டர்ஸ்.&#13

image

விழாவில் கோட் சூட்டுடன் தலைவர்கள் பங்கேற்க, குளிர்காலத்தில் அணியும் ஸ்வட்டர், முகக்கவசம், துணியால் நெய்யப்பட்ட கையுறை என வித்தியாசமான கெட்டப்புடன் வருகை புரிந்தார் பெர்னி. இது விழாவில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்க்க, கால் மேல் கால் போட்டு பவ்வியமாக அமர்ந்தவாறு அவர் விழாவை ரசித்த புகைப்படம் நெட்டிசன்களுக்கு பேசுபொருளானது.&#13

image

இதையடுத்து அதிபராக ஜோ பைடன் கையெழுத்து போடும் போது அருகில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது தொடங்கி,  மலையாள பட போஸ்டரில் போஸ் கொடுத்தது வரை விதவிதமான சித்தரிப்பு மீம்ஸ்களால் உலகளவில் வைரலாக்கப்பட்டார் பெர்னி. மீம்ஸ்களால் பேசுபொருளானது பற்றி பெர்னியிடம் கேட்டதற்கு, குளிருக்காக அப்படி அமர்ந்து விழாவை ரசித்ததாக கூலாக பதிலளித்தார்.

READ  Триумфальное прощание – Газета Коммерсантъ № 169 (7131) от 20.09.2021

Lascia un commento

Il tuo indirizzo email non sarà pubblicato. I campi obbligatori sono contrassegnati *