Valentines Working day | Lovers working day | காதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை: மீறினால் கைது நடவடிக்கை | Sri Lanka

காதலர் தினம்

இலங்கையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வரும் 14ம் தேதி விதிகளை மீறி காதலர் தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களும், அதில் பங்கேற்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதியன்று உலகம் முழுவதும் காதலர் தினம் (Valentines Day) கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை காதலர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக காதலர்கள் மாதக்கணக்கில் தமது வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க நேரிட்டதால் இந்த ஆண்டு காதலர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடும் முடிவில் இருக்கின்றனர்.

இதனிடையே மேற்கத்திய கலாச்சாரமான காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வட மாநிலங்களில் காதலர் தினத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது, ஒவ்வொரு ஆண்டும் வீதியில் தென்படும் காதலர்களை விரட்டுவது, அவர்களை அவமதிப்பது, திருமணம் செய்து வைப்பது என்று சில வலதுசாரி சிந்தனையாளர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் இலங்கையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 14ம் தேதி விதிகளை மீறி காதலர் தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களும், அதில் பங்கேற்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு காவல்துறை ஊடக செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகன, சுகாதாரத் துறையின் அனுமதியின்றி சட்ட விரோதமாக நடத்தப்படும் காதலர் தின கொண்டாட்டங்களில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் எதிரொலியாக காதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இலங்கை காவல்துறையினரின் இந்த அறிவிப்பு அந்நாட்டு காதலர்களை அதிர்ச்சியிலும், அதிருப்திக்கும் ஆளாக்கியுள்ளது.

&#13
&#13
Very first printed: February 12, 2021
&#13


READ  Il Presidente dell'African Development Bank Group inizia una visita di tre giorni negli Emirati Arabi Uniti

Lascia un commento

Il tuo indirizzo email non sarà pubblicato. I campi obbligatori sono contrassegnati *