சீன – தைவான் உறவில் 40 வருடங்களில் இல்லாத அளவு சிக்கல்

பட மூலாதாரம், EPA

சீனா மற்றும் தைவான் இடையே 40 வருடங்களில் இல்லாத அளவு பதற்றம் நிலவுவதாக தைவானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இருநாடுகளுக்கும் இடையே தற்செயலமான தாக்குதல் நடைபெறும் ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். நான்கு நாட்களாக தொடர்ந்து தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனா தொடர்ந்து ராணுவ ஜெட்களை ஏவிவருவதை அடுத்து தைவான் அமைச்சரின் இந்த கருத்து இவ்வாறு வெளியாகியுள்ளது.

தைவான் தன்னை ஒரு இறையாண்மை சுயாட்சி நாடாகதான் கருதுகிறது. ஆனால் சீனா தைவானை தனது நாட்டிற்கு உட்பட்ட ஒரு பகுதியாகவே பார்க்கிறது.

வலுக்கட்டாயமாக தைவானை தனது நாட்டுடன் ஒன்றுசேர்க்கும் வாய்ப்பை இருப்பதை சீனா நிராகரிக்கவில்லை. தைவானின் வான் பாதுகாப்பு மண்டலம், தைவான் ஜலசந்தி மற்றும் சீன பெருநிலப்பரப்பின் ஒரு பெரும் பகுதியை அடக்கியுள்ளது. சீனா மற்றும் தைவானுக்கு இடையே உள்ள அதிகாரபூர்வற்ற எல்லையை கடப்பதை தைவான் ஊடுறுவலாகதான் பார்க்கிறது.

தைவானை சீனா 2025ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக கைப்பற்றி இருக்ககும் என்றும் தைவானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சுகோ செங் தெரிவித்துள்ளார். அவர் தைபேயில் நாடாளுமன்ற கமிட்டியின் சார்பாக பேசினார் அமைச்சர் செங் ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பலை உருவாக்கும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான வரைவு ஒன்றையும் பரிசீலுக்குமாறு தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் தைவானை ஆக்கிரமிக்கும் திறன் ஏற்கனவே உள்ளது என்று ஒப்புக் கொண்டுள்ள அவர் வரும் வாரங்களில் அது மேலும் எளிதானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஆனால் அது எவ்வாறு என்று அவர் விளக்கவில்லை.

1949ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தைவான் சீனாவிடமிருந்து பிரிந்தது. தைவான், ஒரு சுயாதீன நாடு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முயற்சிகளை நோக்கி அந்நாடு நகர்வது சீனாவுக்கு ஒரு பெரும் கவலையாகவே உள்ளது என்றும் அதன் அதிபர் சார் இங்வென் அது நோக்கிய எந்த நடவடிக்கை எடுப்பதையும் தடுக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Photos

சீனாவின் சமீபத்திய இந்த செயல் குறித்து தைவானுடன் நெருக்கமாக இருக்கும் பல மேற்கத்திய நாடுகளும் கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீன அதிபர் ஷி ஜிங்பின் தைவான் ஒப்பந்தத்தை கடைபிடிப்பார் என்று தெரிவித்திருந்தார். அதிகாரப்பூர்வமாக சீனா என்பது ஒரே நாடு என்ற கொள்கையை அமெரிக்கா கடைபிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா தைவானுடன் ஒரு அதிகாரப்பூர்வமற்ற உறவை மேற்கொள்ள அனுமதிக்கிறது. அமெரிக்க தைவான் உறவுகள் குறித்த சட்டம் தைவானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவ வேண்டும் எனவே அமெரிக்கா தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது.

READ  Milatović dichiara la vittoria alle elezioni presidenziali in Montenegro | Notizia

சமீபத்திய நாட்களில் இருநாட்டு உறவுகள் மோசமாக இருந்தாலும், 1996ஆம் ஆண்டு இருந்ததை போன்று மோசமாகவில்லை. அப்போது சீனா தைவானின் அதிபர் தேர்தலில் ஏவுகணை சோதனைகளை கொண்டு தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Lascia un commento

Il tuo indirizzo email non sarà pubblicato. I campi obbligatori sono contrassegnati *