Le notizie più importanti

எகிப்தின் “தொலைந்துபோன தங்க நகரம்” கண்டுபிடிப்பு: பொக்கிஷங்களைத் தேடும் ஆய்வாளர்கள்

Data:

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

எகிப்தில் கண்டறியப்பட்ட பழையான நகரம்

எகிப்தில் பாரோ மன்னன் துத்தன்காமுனின் கல்லறையைப் போல மிகவும் மதிப்பு மிக்க மற்றொரு இடம் கண்டறியப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்திருந்த 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் அது.

இதை “தொலைந்துபோன தங்க நகரம்” என்கிறார் புகழ்பெற்ற எகிப்து தொல்லியல் நிபுணர் ஸாஹி ஹவாஸ்.

இந்த நகரத்தின் பெயர் ஆட்டென். ஹவாஸின் கூற்றுப்படி எகிப்தில் இதுவரை கண்டறியப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய நகரம் இது. பல வெளிநாட்டு அமைப்புகள் கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வியடைந்த இடம்.

கடந்த செப்டம்பரில்தான் இந்த இடம் தோண்டப்பட்டது. சில வாரங்களிலேயே பழமையான நகரம் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டுவிட்டது.

articoli Correlati